விருதுநகர்:விருதுநகர் மீசலூர் விலக்கு ஷீரடி சாய்பாபா மந்திரியில் 96வது புண்ய ஆராதனை தினம், விஜயதசமி விழா நேற்று நடந்தது. காலை 7.35 மணி முதல் 10 மணி வரை ஷீரடி சாய்பாபாவிற்கு பக்தர்கள் பாலபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சாய் பஜன், மகா தீபாராதனை ஆரத்திக்குப்பின் அன்னதானம் நடந்தது. மாலையில் திருவிளக்கு பூஜை, ஆரத்தி பூஜை, இரவு 8.15 மணிக்கு ஆரத்தி, பிரசாரம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மந்திர் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.