தியாகதுருகம்: தியாகதுருகம் சீனுவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனுவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத திருமஞ்சன விழா கடந்த மாதம் 20ம் தேதி துவங்கியது. தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் 3வது சனிக்கிழமையை முன்னிட்டு மூலவருக்கு விசேஷ அலங்காரம் செய்து திருத்தளிகை வழிபாடு நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி திருக்கல்யாண வைபவத்தில் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு, திருக்கல்யாணமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. வெங்கட்ராமன், வினோத் பட்டாச்சாரியார், சுகுமார் பூஜைகளை செய்தனர். ஏற்பாடுகளை சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிரு ஷ்ணமூர்த்தி பிள்ளை உள்ளிட்டோர் செய்திருந்தனர்.