பதிவு செய்த நாள்
07
அக்
2014
12:10
புதுச்சத்திரம்: சொத்து குவிப்பு வழக்கிலிருந்து ஜெ., விடுதலையாகவும், உடல் நலம் பெறவேண்டியும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பேட்டோடையில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பேட்டோடை கெங்கை மாரியம்மன் கோவிலில் நேற்று மாலை 3:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், 3:30 மணிக்கு கூட்டு பிரார்த்தனையும் நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் ராஜசேகர், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சேர்மன் முத்துலிங்கம், ஒன்றிய செயலர் கோவிந்தராஜ், மாவட்ட கவுன்சிலர்கள் கண்ணப்பன், தேவநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் வீரமணி, சித்ரா ராஜி, ஊராட்சித் தலைவர்கள் செங்குட்டுவன், தாமரைச்செல்வி சிவா மற்றும் காயல்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம், வாண்டையாம்பள்ளம், திருச்சோபுரம் மற்றும் தியாகவல்லி ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.