விழுப்புரம்: கண்டமானடியில் அமைந்துள்ள ஜலதர மாரியம்மன் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. கண்டமானடியில் அமைந்துள்ள ஜலதர மாரியம்மன் கோவிலில் நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து 10:00 மணிக்கு கலசம் புறப்பாடு, ஜலதர மாரியம்மன், சித்தி விநாயகர், துர்க்கை அம்மன், பாலமுருகன் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 10:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை சுப்ரமணிய சிவச்சாரியார், கணேச குருக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.