சாயல்குடி: கடலாடி அருகே தேவர்குறிச்சியில் தர்மமுனீஸ்வரர் கோயிலில் புரட்டாசி மாத விழா நடந்தது. சிறப்பு பூஜைகள் செய்து, அலங்காரம் செய்யப்பட்டது. திராளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். சாயல்குடி வி. வி. ஆர்., நகர் பத்திரகாளியம்மன், உஜ்ஜைனி மாகாளியம்மன் கோயில் விழா நடந்தது. அம்மனுக்கு நெய், பால் அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. கன்னிராஜபுரம் செல்வவிநாயகர், முத்தாலம்மன் கோயில் விழாவில் சிறப்பு பூஜைகள் நடந்தது.