பதிவு செய்த நாள்
07
அக்
2014
01:10
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் நடந்த பக்ரீத் தொழுகை நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ராமநாதபுரம் வெளிபட்டணம் பெரிய முஹல்லம் சின்ன பள்ளிவாசல், ரயில்வே ஸ்டேஷன் ரோடு சென்ட்ரல் மஸ்ஜித் இஸ்லாமிய மையம், பாசிபட்டறை தெரு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், சிகில் ராஜ வீதி பெரிய முஹல்லம் பெரிய பள்ளிவாசல், ஹாஜியார் அப்பா தொழுகை பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நேற்று காலை நடந்தது. தொழுகையில் பங்கேற்றோர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டனர். பல்வேறு இடங்களில் குர்பான், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மண்டபம், மரைக்காயர்பட்டினம், வேதாளை, இருமேனி, தர்காவலசை, புதுமடம், பெருங்குளம், பனைக்குளம், புதுவலசை, சித்தார்கோட்டை, அத்தியூத்து, வாணி, வாலாந்தரவை, வழுதூர், சாத்தான்குளம், தேவிபட்டினம் உள்ளிட்ட பள்ளிவாசல்களிலும் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது.
கீழக்கரை: கீழக்கரையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. திறந்தவெளி திடல்களில் காலை 7.30 மணிக்கும் பின் பள்ளிவாசல்களில் காலை 9, 10 மணிக்கும் சிறப்பு தொழுகைகள் நடந்தன. வடக்குத்தெரு மஸ்ஜிதுல் மன்பஈ பள்ளி, ஜும்மா பள்ளிவாசல், பழைய குத்பா பள்ளிவாசல், மேலத்தெரு, புதுப்பள்ளிவாசல், ஓடைக்கரை பள்ளிவாசல், தெற்குத்தெரு பள்ளிவாசல், கிழக்குத்தெரு பள்ளிவாசல், அப்பா பள்ளி, குளங்கரை பள்ளிவாசல் ஆகிய இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. உலக நன்மைக்கான துஆ ஓதப்பட்டது. வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் தெரிவித்துக்கொண்டனர். குர்பானி வழங்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் வடக்குத்தெரு மணல் மேட்டுப்பகுதியிலும், கடற்கரையிலும் பொழுதுபோக்கிற்காக மக்கள் பெருமளவில் கூடினர்.
பெரியபட்டிணம்: பெரியட்டிணத்தில் உள்ள ஜலால், ஜமால், ஜும்மா பள்ளிவாசல், அல்மஜிதுல் பலாஹ் பள்ளிவாசல்களில் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.
பரமக்குடி: பள்ளி வாசல்களில் நேற்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. பரமக்குடி கீழமுஸ்லிம், மேலமுஸ்லிம், மாதவன் நகர், காட்டுப்பரமக்குடி, எமனேஸ்வரம், பார்த்திபனூர், போகலூர் பள்ளி வாசல்களில் காலை 8 மணிக்கு நடந்த தொழுகையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.