சங்கராபுரம்: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெ.,விடுதலையாக வேண்டி சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் மகாநாட்டு மாரியம்மன் கோவி லில் மகா பிருத்யங்கரா ஹோமம் மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. ஒன்றிய சேர்மன் அரசு தலைமை தாங்கினார். அ.பாண்டலம் ஊராட்சி தலைவர் பூங்காவனம் அண்ணா மலை, துணை சேர்மன் திருமால், மாவட்ட கவுன்சிலர் பவுல் ராஜ், கூட்டுறவு வங்கி தலைவர்கள் குசேலன், ராஜேந் திரன், கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். 108 பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை செய்திருந்தார்.