பதிவு செய்த நாள்
08
அக்
2014
12:10
திருப்பூர் : இன்று (அக்., 8) சந்திரகிரகணம் நிகழ்வதை ஒட்டி, பகல் 12.00 மணிக்கு, கோவில் நடை அடைக்கப்பட்டு, இரவு 7.05 மணிக்கு பிறகு திறக்கப்படும். வழக்கமாக, கோவில்களில் காலை நேரத்தில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்படும்; உச்சிகால பூஜைக்குபின், பகல் 1.00 மணியளவில் நடை அடைக்கப்படும். அதன்பின், மாலையில் நடை திறக்கப்பட்டு, இரவு 9.00 மணி வரை பக்தர் தரிசனம், வழிபாடு செய்வது நடைமுறையாக உள்ளது.இன்று மாலை 4.45 முதல் இரவு 7.05 மணி வரை சந்திரகிரகணம் நடக்கிறது. இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பகல் 12.00 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது; கிரகணம் முடிந்த பின், இரவு 7.05 மணிக்கு பிறகு, நடை மீண்டும் திறக்கப்படும்.திருப்பூர் ஈஸ்வரன் கோவில், வீரராகவப் பெருமாள் கோவில், வாழைதோட்டத்து அய்யன் கோவில், அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், பெருமாநல்லூர் கொண்டத்துக் காளியம்மன் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில், பகல் 12.00 மணிக்கு நடை மூடப்பட்டு, இரவு 7.00 மணிக்கு பின், பக்தர்களின் தரிசனத்துக்காக நடை திறக்கப்படும். கிரகணத்தையொட்டி கோவில் கருவறை, பிரகாரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கழுவி சுத்தப்படுத்திய பிறகே, பூஜைகள் துவங்கப்படும், என, அர்ச்சகர் ஒருவர் தெரிவித்தார்.