தஞ்சாவூர்: தஞ்சை, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட், 7ம் தேதி பந்தகால் நடப்பட்டது. மேலும், 10ம் தேதி முத்துப்பல்லக்கு விழாவும், 12ம் தேதி முத்துப்பலக்கு விடையாற்றி விழாவும் நடந்தது. தொடர்ந்து, 14ம் தேதி விக்னேஷ்வர பூஜையும் மறுநாள், கொடியேற்றப்பட்டது. தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. செப்டம்பர், 14ம் தேதி திருத்தேர் நடந்தது. 16ம் தேதி கொடியிறக்கம் செய்யப்பட்டு விடையாற்றி அபிஷேகம் நடந்தது. பிரம்மோற்சவ நிறைவு விழாவான தெப்பத்திரு விழா, 5ம் தேதி நடந்தது. நேற்று தெப்ப விடையாற்றியுடன் விழா நிறைவு பெற்றது.