திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை சென்றனர். திண்டிவனம் ஸ்ரீஅப்பர் சுவாமிகள் உழவாரப்பணிக்குழு செயல் தலைவர் தட்சணாமூர்த்தி ஆசிரியர் தலைமையில் சிவ பக்தர்கள் 8வது ஆண்டாக திருவண்ணாமலைக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். சிவ பக்தர்கள் 160 பேரும் உத்திராட்ச மாலை, காவி வேட்டி அணிந்து, பாத யாத்திரையாக சென்றனர். சாமி தரிசனம் முடிந்து கிரிவலம் சென்று வர உள்ளனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாதயாத்திரை குழு தலைவர் துரை, செயலர்கள் மூர்த்தி, தெய்வசிகாமணி, பொறிய õளர் பாலாஜி ஆகியோர் செய்திருந்தனர்.