பதிவு செய்த நாள்
13
அக்
2014
12:10
உடுமலை : செல்வ விநாயகர் கோவிலில், கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. உடுமலை, ஜி.டி.வி.லே-அவுட்டில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் முருகன், பெருமாள், தட்சிணா மூர்த்தி சுவாமிகளின் சன்னதிகள் அமைந்துள்ளன. நேற்றுமுன்தினம் கிருத்திகை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதியில், சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், ஆராதனை, திருவாசகம் முற்றோதல் நடந்தது. புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் உள்ள பெருமாள் சன்னதியில், சுவாமிக்கு அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனைகள் நடந்தன. சங்கடஹர சதுர்த்தியையொட்டி, செல்வ விநாயகருக்கு அபிேஷகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. புரட்டாசி சனிக்கிழமை, கிருத்திகை, சங்கடஹர சதுர்த்தி என ஒரே நாளில் அமைந்ததால், கோவிலில் காலை முதல் இரவு வரை, வேத கோஷம், பஜனை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.