புதுச்சேரி: சங்கர வித்யாலயா பள்ளியில், நொச்சூர் வெங்கட்ராமனின் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம் நடந்தது. லாஸ்பேட்டை இ.சி.ஆரில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் கடந்த 5ம் தேதி ஸ்ரீமத் பாகவத சப்தாஹவ மகோத்சவம் துவங்கியது. அதையொட்டி, தினமும் காலை 6:30 மணி முதல் 7:30 வரையும், மாலை 6:00 மணி முதல் 8:30 வரை பாகவத உபன்யாசம் நடந்து வருகிறது. கடந்த 10ம் தேதி ஸ்ரீதர் சர்மா, ஆங்கரை ரங்கஸ் சுவாமி தீட்சிதர் உபன்யாசம் செய்தனர். அதைத்தொடர்ந்து நேற்று, ஸ்ரீமத் பாகவத சப்தாஹவ மகோத்சவத்தை துவக்கி வைத்த, ஸ்ரீரமண சரண தீர்த்த நொச்சூர் வெங்கடராமன், ஸ்ரீமத் பாகவத நிறைவு உபன்யாசம் நிகழ்த்தினார். அப்போது, பக்தியின் முக்கியத்துவம், பாகவத உபன்யாசத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.