மண்ணச்சநல்லூர்: புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள கோபுரப்பட்டி ஆதிநாயகப் பெருமாள் கோவிலில், திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், பெருமாளுக்கும் தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு பெருமாளும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். வேத மந்திரங்கள் ழுழங்க திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. இரவு, கற்பக விருட்சத்தில் புறப்பாடு நடந்தது. கோவில் கமிட்டியைச் சேர்ந்த ஆடிட்டர் ராமச்சந்திரன், தலைவர் அனந்தராமன், கமிட்டி துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் கார்த்திக், பொருளாளர் கணேசன் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தேன்மொழி, திருலோகசந்தர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.