யானையைத் தவிர வேறு எந்த மிருகமாவது கடவுளை வழிபட்டதுண்டா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13அக் 2014 01:10
ஈ, எறும்பு முதல் யானை வரை அனைத்தும்கடவுளைப் பூஜித்து பலன் பெற்றதாக கோயில் புராணங்கள் கூறுகின்றன. தேவாரத் தலங்களில் யானை பூஜித்த திருவானைக்காவலில் யானையோடு சிலந்தியும் வழிபட்டு பேறு பெற்றது. காளஹஸ்தியில் யானையும், பாம்பும் வழிபட்டன. திருவாடானையில் யானையுடன் ஆடு வழிபட்டதாக வரலாறு. திருவையாற்றில் காளை, மதுரையில் நாரை, கரிக்குருவி, மயிலாப்பூரில் மயில், திருந்துதேவன்குடியில் நண்டு, திருமணஞ்சேரியில் ஆமை, வேதாரண்யத்தில் எலி, ஈங்கோய்மலையில் ஈ என்று எத்தனையோ ஜீவராசிகள் வழிபட்டு பேறு பெற்றுஉள்ளன.