கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பிரச்னை தீரும்!
பதிவு செய்த நாள்
14
அக் 2014 12:10
குடும்பத்தை அனுசரித்து செல்லும் கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் நவம்பர் வரை புதனும், நவம்பர் 13 வரை சுக்கிரனும் நற்பலனை கொடுப்பர். அதோடு மாதம் முழுவதும் செவ்வாய் நற்பலனை கொடுப்பார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சுமாராக இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் சற்று முயற்சி எடுத்தே முடிக்க வேண்டியிருக்கும். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. சூரியனால் அவப்பெயர் வரலாம். குடும்பத்தில் வசதிகள், ஆனந்தம் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். செவ்வாய் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னை அடியோடு மறையும். பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையைஅடைவர். மற்ற பணிகளில் உள்ளவர்கள் புதனால் உன்னத பலன் காணலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கூட சிலருக்கு வரும். ஆனால் நவம்பர் 2க்குப் பிறகு, அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரம், தொழிலில் சிரத்தை எடுத்தே உழைக்க வேண்டியிருக்கும். அக். 18, நவ. 13,14ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். நவம்பர் 13க்கு பிறகு போட்டியாளர்களால் தொல்லை அதிகரிக்கும். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். யாரிடமும் கவனமாக பழகவேண்டும்
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மாத தொடக்கத்தில் புகழ், பாராட்டு வரும். நவம்பர் 13க்கு பிறகு போட்டிகள்அதிகம் இருக்கும். அரசியல்வாதிகள் முன்னேற்றமான பலனை காணலாம்.
மாணவர்களுக்கு திருப்திகரமான காலமாக இருக்கும்.
விவசாயிகளுக்கு கால்நடை வகையில் வருமானம் கிடைக்கும்.புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும்.
பெண்கள் புத்தாடை, ஆபரணம் வாங்கலாம்.
நல்ல நாள்: அக். 18, 19, 20, 26, 27, 28, 29, நவ. 1, 2, 3, 6, 7, 13, 14, 15, 16.
கவன நாள்: அக். 21, 22, 23 சந்திராஷ்டமம். கவனம்
அதிர்ஷ்ட எண்: 2, 4 நிறம்: வெள்ளை, சிவப்பு
வழிபாடு: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். நவம்பரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் செல்வது மேன்மை தரும்.
|