Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) பிரச்னை தீரும்! கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மேன்மை பெறலாம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2014
12:10

அன்புள்ளம் கொண்ட மகர ராசி அன்பர்களே!

இந்த மாதம் கேது, குரு தொடர்ந்து நன்மை தருவார்கள். சூரியன் மாதம் முழுவதும் நன்மை தருவார் . புதன் நவம்பர் 3க்கு பின்னும், சுக்கிரன் அக்டோபர் 20 வரையும் நவம்பர் 13க்கு பிறகும் நற்பலனை தருவார்கள். நினைத்த காரியம் நிறைவேறும். பொருளாதார வளம் மேம்படும். பணப்புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.  குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.குருவின் பலத்தால் வேலையில் இருப்பவர்கள் மேன்மை காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். பெண்களின் ஆதரவு கிடைக்கும்.விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம்.

வியாபாரம், தொழில் வளர்முகமாக அமையும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அக்டோபர் 20க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் போட்டியாளர்களின் தொல்லை அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்களிடமிருந்து விடுபடுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் அதிக வருவாயை காணும். நவம்பர் 10,11,12ல் எதிர்பாராத பணவரவு இருக்கும். அக்டோபர் 28,29,நவம்பர் 1,2,3-ல் பண விரயம் ஆகலாம்.

கலைஞர்கள் சீரான முன்னேற்றம் காண்பர். அக்டோபர் 20க்கு பிறகு சுக்கிரன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் போட்டி அதிகம் இருக்கும். அரசியல் வாதிகள் நவம்பர் 13க்கு பிறகு நல்ல பெயரையும் பொருளாதார வளத்தையும் பெறுவர்.

மாணவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். விவசாயிகளின் வருமானத்திற்கு குறையிருக்காது. கால்நடை மூலம் அவ்வளவாக வருவாய் கிட்டாது. பெண்கள் குதுõகலமாக இருப்பர். கணவரின் அன்பு கிடைக்க பெறுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவம்பர் 4,5ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். நவம்பர் 13க்கு பிறகு பண வரவு இருக்கும்.  உடல் நலம் ஓரளவு நன்றாகவே இருக்கும்.

நல்ல நாட்கள்: அக். 18, 24, 25, 26, 27, 30, 31, நவ.  4, 5, 10, 11, 12.

கவன நாட்கள்:  அக்.19, 20, நவ, 15,16. சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,3,9.           நிறம்: மஞ்சள்,  பச்சை

வழிபாடு: சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாள், முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். கோதுமை தானம் கொடுக்கலாம்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar