கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் சிவன் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நேற்று மாலை நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. நேற்று தேய்பிறை அஷ்டமி தினத்தையொட்டி சுவாமிக்கு மாலை 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, அரளிப்பூக்களால் அலங்காரம் செய்தனர். ருத்ர மந்திரம் வாசித்து பூஜைகள் செய்யப்பட்டது.