பதிவு செய்த நாள்
16
அக்
2014
12:10
சேலம்: சேலம், கோட்டை பெருமாள் கோவில் உண்டியல் மூலம், 5.01 லட்சம் ரூபாய், 10 கிராம் தங்கம், 56 கிராம் வெள்ளி ஆகியன வருவாயாக கிடைத்துள்ளது.சேலம், கோட்டை பெருமாள் கோவிலில் உண்டியல், நேற்று கோவில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராமர் தலைமையில், ஆய்வாளர் உமாமகேஸ்வரி, தக்கார் திருநாவுக்கரசு, கோவிலின் நிர்வாக அதிகாரி முருகன், தலைமை எழுத்தர் சங்கர் ஆகியோர் முன்னிலையில், கோவில் உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணும் இடத்துக்கு கொண்டு வரப்பட்டது.உண்டியல் எண்ணும் பணியில், ஓம் நமச்சிவாயா நண்பர்கள் குழுவை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டனர். கடந்த ஜன.,21ல் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்ட போது, 3 லட்சத்து, 77 ஆயிரத்து, 362 ரூபாய் பணமாகவும், 26 கிராம் தங்கம், 93 கிராம் வெள்ளி ஆகியன வருவாயாக கிடைத்தது.அதைத் தொடர்ந்து புரட்டாசி மாதம் என்பதால், கோவில் வளாகத்தில், ஐந்து சிறப்பு உண்டியல் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சிறப்பு உண்டியல் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமைக்கு பின்னர் திங்கட்கிழமைகளில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.அந்த வகையில், முதல் சனிக்கிழமையில், 23 ஆயிரத்து, 442 ரூபாயும், இரண்டாவது சனிக்கிழமையில், 14 ஆயிரத்து, 486 ரூபாயும், மூன்றாவது சனிக்கிழமையில், 24 ஆயிரத்து, 803 ரூபாயும், நான்காவது சனிக்கிழமையில், 25 ஆயிரத்து, 462 ரூபாயும் வருவாயாக கிடைத்தது.அதைத் தொடர்ந்து நேற்று கோவில் உண்டியல் எண்ணப்பட்டதில், 5 லட்சத்து ஆயிரத்து, 260 ரூபாய் பணமாகவும், 10 கிராம் தங்கம், 56 கிராம் வெள்ளி ஆகியன வருவாயாக கிடைத்தது. தொடர்ந்து பண்டிகை வருவதால், அடுத்த முறை உண்டியல் எண்ணப்படும் போது, வருவாய் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.