நோன்பு கயிறு விற்பனை விழுப்புரத்தில் விறுவிறுப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23அக் 2014 02:10
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் தீபாவளி பண்டிகையையொட்டி நோன்பு கயிறு விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. தீபாவளியை முன்னிட்டு விழுப்புரம் நகரில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. பெண்கள் நோன்பு கயிறு மற்றும் 21 வகையான காய்கறிகளை வைத்து, குடும்பத்துடன் வழிபட்டனர். விழுப்புரம் உழவர் சந்தை, எம்.ஜி.,ரோடு <உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வளையல் கடைகள் மற்றும் தள்ளு வண்டிகளில் வைத்து, நோன்பு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. தள்ளு வண்டிகளில் 21 வகையான நோன்பு காய்கறி வகைகள், 20 ரூபாய் என விற்கப் பட்டது. இதனை பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.