Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களில் சுமங்கலி பெண்கள் கேதார ... பெருமாள் கோவிலில் கவுரி விரத பூஜை! பெருமாள் கோவிலில் கவுரி விரத பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நோய் தீர்க்க வழிபாடு: உதவிய பாதகுறடு.. முன்னோர் கடைபிடித்த விஞ்ஞானம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 அக்
2014
11:10

மடத்துக்குளம் : ’அக்குபஞ்சர்’ மருத்துவ சிகிச்சைக்கு முன்னோடியாக, நமது முன்னோர்கள், பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே ’பாத குறடு’ முறையை கடைபிடித்துள்ளனர். மனித உடலின் முக்கிய உறுப்புகளுக்கு செல்லும், நரம்பு முடிச்சுகளை அழுத்துவதன் மூலம், ரத்த ஓட்டத்தையும், உணர்வுகளையும் சீர்செய்து, நோய்களுக்கு தீர்வுகாணும் முறை ’அக்குபஞ்சர் சிகிச்சை’ என்றழைக்கப்படுகிறது. அக்காலத்தில் நோய்கள் தீர, தெய்வ வேண்டுதல்களையே மக்கள் நம்பியிருந்தனர்.நோய் குணமாக வேண்டி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இதில் ஒன்று ’பாதகுறடு’ நேர்த்திக்கடன். பாதங்களில் உள்ள நரம்பு முடிச்சுகளை, கூர்மையான ஆணிகளால் தொடர்ந்து அழுத்துவதால், நரம்பு செல்லும் இடங்களுக்கு, இந்த அழுத்தம் பரவுவதுடன், ரத்த ஒட்டம் சீராகி வலி குறையும். இதற்கு ’பாதகுறடு’ நேர்த்திக்கடன் முறையை மக்கள் பின்பற்றினர்.மரப்பலகையில் காலணியின் அடிப்பாகம் செய்து, அதில், குறிப்பிட்டஅளவு இடைவெளி விட்டு,4 இன்ச் உயரமுடைய, 50 இரும்பு ஆணிகள், அடிக்கப்பட்டு, முனைகள் மழுங்கடிக்கப்படும். பெருவிரல் பிடிமானத்துக்கு, மரத்தில் அலங்காரத்துடன் கூடிய, பிடியை அமைத்தனர்.இது, ’பாதகுறடு’ என அழைக்கப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு முன் அனைத்து கோவில்களிலும் காணப்பட்ட இவை, தற்போது, சில பழமையான கோவில்களில், பாதுகாக்கப்படுகின்றன. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், தன்னாசியப்பன் கோவிலில் இந்த ’பாத குறடு’ உள்ளது. இந்த கோவில் பூசாரி ராமசாமி கூறுகையில், ”கை, கால்வலி தீர, வேண்டி கொள்பவர்கள், பாத குறடு செய்து, அதில் நடந்து வருவார்கள். சிலர், கோவிலுக்கு காணிக்கையாகவும் வழங்குவர். இந்த கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தமுறை இருந்தது, இப்போது வழக்கத்தில் இல்லை,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar