பதிவு செய்த நாள்
24
அக்
2014
12:10
ஆர்.கே.பேட்டை: சந்தானவேணுகோபால சுவாமி கோவில் கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ள தகவல் என்ன என்பது தெரியாமலே, அவை அழிந்து வரும் நிலை உள்ளது. தொல்லியல் துறையினர் அவற்றை படியெடுக்க, பக்தர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை – திருத்தணி நெடுஞ்சாலையில் உள்ளது எஸ்.வி.ஜி.புரம் சந்தானவேணுகோபால சுவாமிகோவில். இந்த கோவிலில் உள்ள மூலவர், பசுவின் மீது சாய்ந்து புல்லா ங்குழல் வாசித்தபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கிருஷ்ணர், பசு, பிரபை என, அனைத்தும் ஒரே கல்லால் வடிக்கப்பட்டது இந்த சிலை. ÷மலும், வேணுகோபாலனின் பாதத்தை, பசு தனது நாவால் தடவிக்கொடுப்பது போல மிகவும் நேர்த்தியாக காணப்படுகிறது. இந்த கோவில் 1660களில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த கல்வெட்டுகள் கோவில், வெளிபிரகாரத்தில் உள்ளது. ஆனால், அவை தெளிவாக இல்லை. அவை முற்றிலுமாக அழிவதற்கு முன், அவற்றை படி எடுத்து, வரலாற்றை பக்தர்களுக்கு தெரிவிக்க, மாநில தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.