பாகூர் : குருஜி முரளிதர சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், இன்று (24ம் தேதி) மகா ருத்ராபிஷேகம் நடக்கிறது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், சென்னை மணிமங்கலம் படப்பை முரளிதர சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, இன்று (24ம் தேதி) மாலை 6.00 மணிக்கு, மூலநாதர் சுவாமிக்கு மகா ருத்ராபிஷேகம் நடக்கிறது.