பதிவு செய்த நாள்
24
அக்
2014
01:10
உடுமலை: உடுமலை அருகே வெனசப்பட்டியில், கருப்பராயன் கோவில் கும்பாபிேஷகம் வரும் 27 ம் தேதி நடக்கிறது. உடுமலை வெனசப்பட்டியில் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. கோவிலில், திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு, விநாயகர், கருப்பராயசாமி, தன்னாசியப்பன், கன்னிமார் ஆகிய சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன. கும்பாபிேஷக விழா வரும் 25 ம் தேதி துவங்குகிறது. காலை 10.00 மணிக்கு, தெய்வகுளம் காளியம்மன் கோவில் மற்றும் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. 26 ம் தேதி, காலை 8:00 மணிக்கு, மகாகணபதி ேஹாமம், கோ பூஜை ஆகிய பூஜைகளும், மாலை 4:00 மணி முதல் முதற்கால வேள்வி பூஜைகள் நடக்கின்றன.இரவு 8:00 மணிக்கு, கிராமக்கலை கும்மிப்பாட்டு மற்றும் தேவராட்டம் நடக்கிறது. 10:00 மணிக்கு, எந்திர ஸ்தாபனம், பிடிமண் சாத்துதல் ஆகிய பூஜைகள் நடக்கின்றன.27 ம் தேதி காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி துவங்குகிறது. காலை 9:00 மணிக்கு கோபுர கலசத்திற்கு கும்பாபிேஷகமும், 10:00 மணிக்குள் கருப்பராயன் உட்பட தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு, குதிரை வாகன சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.