Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருச்செந்தூர், பழநியில் இன்று சூரசம்ஹாரம்! திருச்செந்தூர், பழநியில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2014
03:10

நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலவர் கோவிலில், கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில்  திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நாகை அடுத்த சிக்கலில்,கோச்செங்கட் சோழனால் கி.பி.4 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட,  அறுபடை வீடுகளுக்கு இணையான சிங்காரவேலவர் கோவில் உள்ளது.முருகப்பெருமானின் அவதார நோக்கமான சூரசம்ஹாரத்திற்கு, இக்கோவிலில் தான் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் சக்திவேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்ததாக கந்த புராண வரலாறு.

Default Image
Next News

திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர்,கச்சியப்பர்,சிதம்பரமுனிவர் ஆகியோர்களால் பாடல் பெற்ற, இக்கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த  23 ம் தேதி,கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நாள்தோறும் சிங்காரவேலவர், ஆட்டுக்கிடா, தங்கமயில்,வெள்ளி ரிஷப  வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கந்தசஷ்டியின்  முக்கிய நிகழ்வாக காலை 5.00 மணிக்கு சிங்காரவேலவர், வள்ளி,தெய் வானை சமேதராய் சர்வ அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளி,வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar