Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்ன பிரசன்ன பெருமாள் கோவிலில் ... நாமக்கல் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்! நாமக்கல் முருகன் கோவிலில் சூரசம்ஹார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை பெய்ய வேண்டி கழுதைக்கு திருமணம் செய்து சிறப்பு விருந்து!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 அக்
2014
12:10

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த மகாராஜகடையில், மழை பெய்ய வேண்டி, கழுதைகளுக்கு திருமணம், வெகு விமரிசையாக செய்யப்பட்டது. திருமண சிறப்பு விருந்தில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது மகாராஜகடை. இக்கிராமத்தில், ஆற்று பாசனம் மற்றும் கால்வாய் பாசனம் ஏதும் இல்லாத நிலையில், நிலத்தடி நீரை கொண்டு விவசாயம் செய்யப்படுகிறது. ஆந்திர மாநில எல்லையில் உள்ள மலைகளில் இருந்து வரும் தண்ணீரால், மகாராஜகடை கிராமத்தில் உள்ள கிணறு மற்றும் போர்வெல்களில், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, வாழை, கரும்பு, பப்பாளி, தக்காளி, கத்திரி போன்ற பண பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சில தினங்களாக, தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஆனால், மகாராஜகடை சுற்றுவட்டார பகுதியில், மூன்று ஆண்டுகளாக, போதிய மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம், ஆயிரம் அடிக்கு கீழ் சென்று, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால், தங்கள் பகுதியில் மழை பெய்ய, வருண பகவானை வேண்டி, ஊர் பொதுமக்கள், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்க, முடிவு செய்தனர். இதற்காக, தங்கள் ஊரில் உள்ள யோகராஜா, யோகராணி ஆகிய கழுதைகளுக்கு, திருமணம் செய்து வைக்க, திருமண பத்திரிகை அச்சடித்து வினியோகம் செய்தனர். நேற்று காலை, மகாராஜகடை பூவவுண்டன் ஏரிக்கு, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட, புத்தாடை அணிந்த கழுதைகளை, மேள தாளங்கள் முழங்க, பொதுமக்கள் அழைத்து வந்தனர். அங்கு கூடியிருந்த பெண்கள், வாழ்த்து பாடல்களை பாடினர். தொடர்ந்து, சிறப்பு யாகம் செய்யப்பட்டது. காலை, 9.30 மணிக்கு, முகூர்த்தம் நடந்தது. திருமண விழாவில், மகாராஜகடை, சிந்தகம்பள்ளி, தாசினாவூர், தங்காடி குப்பம், கொல்லூர், மாரேகவுண்டனூர், நலகுண்டலப்பள்ளி, நாரலப்பள்ளி, முலுக்கலப்பள்ளி, பைரே கவுண்டனூர், சின்ன சக்னாவூர், பெரிய சக்னாவூர், ஏக்கல்நத்தம், மேகலசின்னம்பள்ளி, பெலவர்த்தி ஆகிய கிராமங்களை சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, திருமண சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் நடந்த ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் சனிக் கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar