மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் தேவார பாடல் பெற்ற அருள்மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது.நவகிரகங்களில் செவ்வாய் ஸ்தலமான இந்த கோயிலில் முருகபெருமான், முத்துகுமார சுவாமியாக பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார். இக்கோயிலில் நேற்று சூரசம்ஹார விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை முத்து க்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து தரதத்தில் முருக பெரு மான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.இரவு 7மணிக்கு கார்த்திகை மண்டபத்தில் முருகன் எழுந்தருள சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து வைத்தியநாத சுவாமியிடம், வேல் வாங்கிய முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் மேல சன்னதியில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்த ருள 8: 30 தருமபுரம் ஆதினம் ஸ்ரீ ல ஸ்ரீ சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னி லையில் முருக பெருமான்,சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார விழா நடைபெற்றது.தொடர்ந்து முரு கனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.