பதிவு செய்த நாள்
03
நவ
2014
12:11
கும்பகோணம்: சுவாமிமலையில், வரும், 6 ம் தேதி ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது. முருகனின், நான்காவது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாத சுவாமி திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இத்தலத்தில், பவுர்ணமி கிரிவலம் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் வரும், 6ம் தேதி மாலை நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு வல்லபகணபதி சன்னதியிலிருந்து புறப்படும் கிரிவலத்தை டாக்டர் ராஜேசேகரன் தொடங்கி வைக்கின்றார். தொடர்ந்து, தேவார திருப்புகழ் பாராயண முழக்கத்துடன் சுவாமிமலை கிரிவல கமிட்டியினரால் நடத்தப்படும் கூட்டுவழிபாடு மற்றும் கிரிவலம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கிரிவல கமிட்டி தலைவர் கேசவராஜன், செயலாளர் சிவசங்கரன், பொருளாளர் சேகர், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், செய்தி தொடர்பாளர் சுவாமிநாதன் மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.