பதிவு செய்த நாள்
03
நவ
2014
12:11
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம், கோவில்குளம் வடக்கு, பூர்ண, புஷ்கலை சமேத சேவுகபெருமாள் ஐய்யனார் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடந்தது. வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம், கோவில்குளம் வடக்கு, அருள்மிகு பூர்ண, புஷ்கலை சமேத சேவுகபெருமாள் ஐய்யனார் ஆலயம் மற்றும் பரிவாரத் தெய்வங்களான தூண்டிக்காரன், இனியாரன், நொண்டிவீரன் ஆகிய கோவில்களில் ஆலய திருப்பணி நிறைவடைந்ததை அடுத்து, ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, மூன்று நாட்கள் நடந்த யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து. கடம் ஊர்வலம் நடந்தது. சிவாச்சாரியார்கள் ஆலய கோபுர கலசத்தில் கும்பாபிஷேக புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து மூலவருக்கும், பரிவாரத் தெய்வங்களுக்கும் மகா அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. நிகழ்ச்சியில். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.