திருப்பூர் : திருப்பூரில், வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரவசமடைந்த அப்பகுதி மக்கள், மரத்தை அலங்கரித்து பூஜை செய்து வழிபட்டனர்.புதுராமகிருஷ்ணாபுரம் அருகே மேட்டாங்காடு உள்ளது. இங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள வேப்பமரத்தில், நேற்று காலை பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பால் வடிந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சிலர், வேப்பமரத்துக்கு புடவை சாத்தி, அலங்காரம் செய்தனர். பின், அபிஷேகம் செய்யப்பட்டு மரத்துக்கு தீபராதனை காட்டப்பட்டது. பொதுமக்கள் பலரும், வேப்பமரத்தை வணங்கி சென்றனர்.