பதிவு செய்த நாள்
05
நவ
2014
01:11
வேலாயுதம்பாளையம் : கரூர் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள செட்டிதோட்டம், கற்பக விநாயகர் கோவில், நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.கும்பாபிஷேக விழாவையொட்டி, சேமங்கி காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள், தீர்த்த குடங்கள் எடுத்து வந்தனர். பின், கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், திருமஞ்சனம், உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் கலந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது.நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.