பதிவு செய்த நாள்
06
நவ
2014
11:11
திருப்பதி: திருமலை ஏழுமலையானை, கடந்த மாதத்தில், 19 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்:.
19,98,708 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். 41,85,424 பேர் அன்ன பிரசாதம் உண்டனர். 20,92,300 பேர் காபி, பால் அருந்தினர். 10,86,492 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். 75,59,929 சிறிய லட்டுகள் பிரசாதமாக அளிக்கப்பட்டது. 1,24,689 அறைகள் வாடகைக்கு எடுக்கப் பட்டது.354 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. 35,05,846 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8,790 ஸ்ரீவாரி சேவார்த்திகள் சேவை புரிந்தனர்.