திருவல்லிக்கேணி: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், சூரிய ஒளியால் மின்சாரம் தயாரிக்கும் கருவி பொருத்தப்பட்டு வருகிறது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சுவாமி சன்னதிகளில் முழுவதும் ஏசி இயந்திரங்கள்பொருத்தப்பட்டுள்ளன. சுவாமி சன்னிதிகளில் அலங்காரம் செய்வதற்காக வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் மாதந்தோறும் மின்சாரத்திற்காக, இரண்டு முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மின் கட்டணத்தை சேமிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில், ஐந்து லட்சம் ரூபாயில், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் கருவி பொருத்தும் பணி நடந்து வருகிறது. ஓரிரு வாரங்களில் இந்த பணி முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.