அவலூர்பேட்டை: தாதங்குப்பத்தில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. மேல்மலையனுõர் ஒன்றியம் நொச்சலூர் ஊராட்சியை சேர்ந்த தாதங்குப்பம் கிராமத்தில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மங்கள இசை, கணபதி , லட்சுமி, நவகிரக பூஜை, அங்குரார்ப்பணம், தீபாராதனை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு 2ம் கால யாக சாலை பூஜையும், மகா கும்பாபிஷேகமும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் செல்வ விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.