மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த நாங்கூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைகுந்த நாயகி சமேத வைகுண்டநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்றுகாலை யாக சாலை பூஜைகள் முடிந்து பூர்ணாகுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலில் உள்ள பெருமாள் மற்றும் தாயார் சன் னதி விமானங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. வேதமந்திரங்கள் முழங்க 8 மணிக்கு விமான கலசங்களுக்கு பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். இதில் இந்து சமய அற நிலையத்துறை, தமிழ் பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை செயலாளர் கண்ணன், இந்து சமய அற நிலை யத்துறை இணை ஆணையர் ஜெகநாதன், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தாக்கள் செய்திருந்தனர். திருவென்காடு போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.