Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோக நரசிங்க பெருமாள் கோயில் ... தாதங்குப்பத்தில் கும்பாபிஷேக விழா! தாதங்குப்பத்தில் கும்பாபிஷேக விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை மகாமாரியம்மன் கோவில் தேர்திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 நவ
2014
12:11

சென்னிமலை : சென்னிமலை அடுத்த ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேர்திருவிழா, பூச்சாட்டுதலுடன் துவங்கி நடந்து வருகிறது. நவ., 5ம் தேதி இரவு கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. அன்று முதல், இரவில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜைகளும் நடக்கிறது. காலை, ஆறு மணிக்கு பூவோடு எடுக்கும் நிகழ்ச்சியும், தொடர்ந்து, கம்பத்துக்கு, ஏராளமான பெண்கள் மஞ்சள் பூசி, தண்ணீர் ஊற்றி வழிபாடு நடத்துகின்றனர். இன்று இரவு, தலவுமலை மற்றும் வடுகபாளையம் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள், காவடி எடுத்து வந்து, மாரியம்மனை வழிபடுவர்.நாளை, இரவு, பத்து மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும், இரவு, 12 மணிக்கு அம்மன்கோவில் புதூர், வாய்கால்மேடு பகுதி மக்கள், காவடி எடுத்து வந்து வழிபாடு நடத்துவர்.நவ., 12ம் தேதி, காவிரி சென்று தீர்த்தம் கொண்டு வந்து, இரவு, 8.30 மணிக்கு மாரியம்மனுக்கு தீர்த்த அபிஷேக, ஆராதனையும், சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியும் நடக்கிறது.தொடந்து, இரவு, 11 மணிக்கு கொமாரபாளையம், பனங்காட்டுபுதூர் மக்கள் காவடி எடுத்து வந்து, மாரியம்மனை வழிபடுவர். பின், அதிகாலை, இரண்டு மணிக்கு காளிக்காவலசு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, மாவிளக்கு பூஜை நடக்கும். 13ம் தேதி காலை, 7 மணிக்கு உற்சவ அம்மைக்கு, மகா அபிஷேகமும், அதன் பின்பு காலை, 7.30 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கும்.பின், பொங்கல் வைத்து, ஆடு, கோழி பழியிட்டு, வழிபடுவர். மாலை, 3 மணிக்கு, குழந்தைகள் சேற்றால் வேஷமிட்டு, மாரியம்மனுக்கு காணிக்கை செலுத்துவர். அன்று மாலை, 4 மணிக்கு தேர் நிலை சேரும். இரவில், மலர் அலங்காரத்தில் மாரியம்மன் திருவீதி உலா காட்சி நடக்கும்.அன்று, வானவேடிக்கை நடக்கிறது. 14ம் தேதி, மஞ்சள் நீர் உற்சவத்துடன், விழா நிறைவு பெறுகிறது.இவ்விழாவை தொடர்ந்து, முருங்கத்தொழுவு கிராமத்தை சுற்றிய, 14க்கும் மேற்பட்ட கிராமங்களில், பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar