சென்னை தண்டையார் பேட்டை அருட்கோட்டம் முருகன் கோயிலில் புத்தர் சன்னதி இருக்கிறது. 1965-ம் ஆண்டு பர்மாவிலிருந்து அகதிகளாக வந்த பர்மியத் தமிழர்களுள் ஒரு சிலர் தண்டையார்பேட்டை பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அவர்கள் பர்மாவிலிருந்து திரும்பும் போது தங்களுடன் ஒரு புத்தர் சிலையையும் கொண்டு வந்து, இங்கு வைத்து வழிபடலாயினர். இந்துக் கோயிலில் புத்தர் சிலை வைத்து வழிபாடு நடைபெறுவது அபூர்வம்.