மரக்காணம்: மரக்காணம் பகுதியில் சுற்றுலா பயணிகள் வரத் துவங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாமல்லபுரம் ”ற்றுலாதலம் என்பதால் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை வருவர். இவர்கள் இ.சி.ஆர்.,வழியாக சைக்கிள், இரு சக்கர வாகனம், கார் போன்ற வாகனங்களில் ஆரோவில் பகுதியில் இருந்து மரக்காணம் வழியாக மாமல்லபுரம் செல்வர். சில நாட்களாக வெளிநாட்டு பயணிகள் வரத் துவங்கியதால் கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு, அனுமந்தை, கீழ்பேட்டை, மரக்காணம் உள்ளிட்ட இடங்களில் வியாபாரம் சுறுசுறுப்படைந்தது. மரக்காணம் பக்கிங்காம் ஏரியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கீழ்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற அய்யனாரப்பன் ÷ காவிலை கண்டு ரசித்தனர்.