பதிவு செய்த நாள்
11
நவ
2014
11:11
திருவள்ளூர்: திருவள்ளூர், திருக்காளி அம்ம,ன் 20ம் ஆண்டு உற்சவத்தை முன்னிட்டு, அம்மன் ராஜவீதியில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர், வேம்புலி அம்மன் கோவிலில் எழுந்தருளி உள்ள, திருக்காளி அம்மனுக்கு, 20ம் ஆண்டு உற்சவம், நேற்று முன்தினம் நடந்தது. காலை 8:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து கணபதி ஹோமம், அங்குரார்ப்பணம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு, திருக்காளி அம்மன் ராஜவீதியில் வீதியுலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.