சிதம்பரம்: சிதம்பரம் திருப்பாற்கடல் குளத்தில் புதுச்சேரி சிவனடியார்கள் உழவாரப் பணி மேற்கொண்டனர். சிதம்பரம், வேங்கான் தெரு திருப் பாற்கடல் குளத்தில் பல ஆண்டாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி இந்து ஆலய பாதுகாப்புக் குழு சார்பில் துõர் வாரி திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் காட்டுக்குப்பம் மற்றும் முதலியார்பேட்டையைச் சேர்ந்த சிவனடியார்கள் முருகன் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் குளத்தில் துõர் வாரி, ஆழப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். பின்னர் ஓம் குருநமச்சிவாய மடத்தில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று பன்னிரு திருமுறை பாடல்கள் பாடி வழிபட்டனர்.