பதிவு செய்த நாள்
12
நவ
2014
12:11
வேலாயுதம்பாளையம்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மீண்டும் முதல்வராக வேண்டி, வேலாயுதம்பாளையம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு அபிஷேகத்தை முன்னிட்டு, பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், திருநீறு, இளநீர் மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் பாலசுப்ரமணியசுவாமிக்கு பூக்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது. இதில், புன்செய் புகளூர் பேரூர் கழக செயலாளர் விவேகானந்தன் தலைமையில், கரூர் யூனியன் சேர்மன் திருவிகா, மாவட்ட துணைச் செயலாளர் காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.