கூடலூர்: கூடலூர் குசுமகிரி குமரமுருகன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கூடலூர் குசுமகிரி அருள்மிகு குமரமுருகன் கோவில் கும்பாபிஷேகம் விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி, மகா தீபாராதனை, கடம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 9:45 மணிக்கு ராஜ சரவண மாணிக்க வாசக குரு சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் சிறப் பாக நடந்தது. தொடர்ந்து விநாயகர், பரிவார தெய்வங்களுக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், பகல் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தன. மாலை 6:30 மணிக்கு குழந் தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.