அங்காளம்மன் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு வந்தது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13நவ 2014 12:11
திட்டக்குடி: ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் இந்து சமய அறநிலையத் துறையினரின் கட்டுப் பாட்டிற்குள் வந்தது. ராமநத்தம் அடுத்த கொரக்கவாடி கிராமத்தில் 975 ஆண்டுகள் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், குலதெய்வ வழிபாட்டுப் பேரவையின் தலைவராக உள்ள சேலம் ராசிபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் முயற்சிய õல் வழிபாட்டுக்காரர்களிடம் வசூல் செய்து கடந்த 6 மாதங்களுக்கு முன் 80 லட்சம் ரூபாய் செலவில் மண்டபம் கட்டப்பட்டது. இதற்கிடையே பூ சாரிகளின் முறைகேடான நிர்வாகத்தால், ஆறுமுகம் மற்றும் பேரவை உறுப்பினர்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து நிர்வகிக்க கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து அறநிலையத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ஜோதி, ÷ காவில் ஆய்வாளர் சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் கோவில் அறநிலையத் துறையினரின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவிலில் உள்ள உண்டியலுக்கு சீல் வைக்கப்பட்டது. இது குறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி கூறுகையில், கோவிலின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொரக்கவாடி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கொண்டு வரப்பட்டுள்ளது. எங்கள் பொறியாளர்கள் ஆய்வு செய்து தரும் அறிக்கையின் அடிப்படையில் கோவிலுக்குத் தேவையான மதில் சுவர் உள்ளிட்டவை கட்டித்தரப்படும் என்றார்.