பதிவு செய்த நாள்
13
நவ
2014
12:11
திருவள்ளூர்: விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி உற்சவம் நடைபெற்றது. திருவள்ளூர், ஜெயா நகர் விரிவாக்கம், மகாவல்லப கணபதி கோவில், பூங்கா நகர் சிவா - விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகர் கோவில், பஜார் தெருவில் உள்ள திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள விநாயகர் சன்னிதியிலும், சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, விநாயகருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, அருகம்புல் மாலை அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் விழாவில் பங்கேற்று, விநாயகரை தரிசித்தனர். பஞ்சேஷ்டியை அடுத்த, நத்தத்தில் உள்ள ஆனந்தவல்லி சமேத வாலீஸ்வரர் கோவிலில் உள்ள காரிய சித்தி கணபதிக்கு, ககார சகஸ்ரநாம அர்ச்சனையும், சங்கடஹர நிவாரண ஹோமமும் நடைபெற்றன. பின், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.