வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதி கோயில்களில் நேற்று ஐப்பசி தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது. சேனியர்குடியில் உள்ள சங்கிலிமாடன், மீனாட்சி சமேத சொக்கநாதர் கோயிலில் காலபைரவருக்கு 18 வகை அபிஷேகம் செய்யப்பட்டு நன்பகல் பூஜைகள் நடந்தது. மாலையில் சுவாமி விபூதிக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். சிறப்பு அர்ச்சனைகளுடன் வழிபாடு, பெண்களின் பஜனை, உற்சவ வழிபாடு நடந்தது.
* வத்திராயிருப்பு காசிவிஸ்நாதர் கோயிலில் நடந்த தேய்பிறை அஷ்டமி பூஜையில் சுவாமிக்கு பல்வகை அபிஷேக தீபாராதனைகளுடன் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். * மூவரைவென்றான் மொட்டைமலையில் அமைந்துள்ள மரகதவல்லி சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு மாலையில் சிறப்பு அர்ச்சனைகளுடன் பூஜைகள் நடந்தது.