ஸ்ரீரங்கம் கோவிலில் சன்னதிபிரகார வாசல் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15நவ 2014 12:11
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் கடந்த, 100 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த சன்னதி பிரகாச வாசல் கண்டுப்பிடிக்கப்பட்டது.வைணவ தளங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்காக, கோவிலில் பழமை, தொன்மை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கோவிலில் உள்ள வேணுகோபால் சன்னதியில், பழங்கால சிற்பங்கள் உள்ளது. திருப்பணியின்போது சன்னதியில், சுமார் இரண்டு அடி ஆழத்தில் புதைத்திருந்த கோபுரத்தின் அடிப்பகுதி கண்டுப்பிடிக்கப் பட்டது. மேலும், வேணுகோபால் சன்னதியின் கூடுதல் கட்டுமானத்தை திருப்பணிக்காக இடித்த போது, பிரதட்சண வாயில் தெரிந்தது.இந்த வாயில் கடந்த, 100 ஆண்டுகளாக சுவரால் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்த பிரகார வாசல் திறக்கப்பட்டால், கிழக்கு வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பெரும் வசதியாக இருக்கும் என கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.