பதிவு செய்த நாள்
15
நவ
2014
12:11
சென்னிமலை: சென்னிமலை, மலை மீதுள்ள முருகன் கோவிலில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில், 6.39 லட்சம் காணிக்கை இருந்தது.சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் உள்ள திருப்பணி உண்டியல், கடந்த, ஆறு மாதங்களுக்கு முன்பு,மே, 21ல் திறந்து எண்ணப்பட்டது.நேற்று, அறநிலையத்துறை உதவி ஆணையர் சபர்மதி தலைமையில், உண்டியல்கள் திறக்கப்பட்டது. பெருந்துறை கோவில் ஆய்வாளர் ஜெயமணி, சென்னிமலை கோவில் செயல் அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆறு லட்சத்து, 39 ஆயிரத்து, 859 ரூபாய் ரொக்கப்பணம், 24.380 கிராம் தங்கம், 38 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியலில் காணிக்கையாக இருந்தது.உண்டியல் எண்ணும் பணியில், கோவில் பணியாளர்கள் ராஜு, பாலு மற்றும் பக்தர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் ஈடுபட்டனர்.