செஞ்சி: செஞ்சி தாலுகா காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் தத்தாச்சாரி சன்னதியில் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று காலை 9 மணிக்கு கலச பிரதிஷ்டையும், கணபதி ஹோமம் நடந்தது. 9.30 மணிக்கு தத்தாச்சாரி சிலை பிரதிஷ்டை, மருந்து சாற்றுதல் நடந்தது. 10 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. கலச ஸ்தாபனம் செய்து லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், விசேஷ திரவிய ஹோமம் செய்தனர். 11 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, கலச நீர் கொண்டு தத்தாச்சாரிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர்.