பதிவு செய்த நாள்
18
நவ
2014
12:11
புதுச்சேரி: புதுச்சேரி கொம்பாக்கம், பாப்பாஞ்சாவடி, வில்லியனுார், திருக்க னுார் உள்ளிட்ட பகுதியில் களிமண் மற்றும் டெரகோட்டா பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, பாப்பாஞ்சாவடியில் டிசைன் அகல் விளக்குகள், டெரகோட்டா விளக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இங்கு, ஸ்டார் விளக்குகள், கொத்து விளக்கு, விநாயகர், லட்சுமியுடன் கூடிய அகல் விளக்குகள், சிம்னி விளக்கு, அலாவுதின் விளக்கு, சாதாரண களிமண் அகல் விளக்கு மற்றும் தாமரை விளக்கு, சங்கு விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த விளக்குகள் புதுச்சேரியில் மட்டும் இன்றி, தமிழக பகுதிகளுக்கும், பெங்களூர், மலேசியாவிற்கும் விற்பனைக்கு அனுப்பப் படுகிறது. விளக்கு தயாரிக்கும் சண்முகம், அவரது மனைவி அலமேலு கூறுகையில், ’அகல் விளக்கு தயாரிக்கும் பணியை குடும்ப தொழிலாக செய்து வருகிறோம். மேலும் பலருக்கு பயிற்சி கொடுத்து வேலை வாய்ப்பும் வழங்கி வருகிறோம்’ என்று தெரிவித்தனர்.