ராஜபாளையம் : ராஜபாளையம் மதுரை ரோட்டில் உள்ள திருச்சிற்றம்பல குருநாதசுவாமி கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. இதற்காக நேற்று காலை கோயிலில் ஹோமம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. நகர் மற்றும் சுற்று கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.