தொண்டி : தொண்டி அருகே பாசிபட்டினம் சர்தார் னைநா முகமது ஒலியுல்லா தர்கா சந்தனக்கூடு விழா, அக்.,26 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் நவ.,8 ல் இரவு விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. விழாவை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.